Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அமெரிக்காவில் 330 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் இந்தியா

அமெரிக்காவில் 330 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் இந்தியா

இந்தியாவின் புதிய முதலீடு திட்டங்கள் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை முழு விவரங்களை வெளியிடவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவில் பல்வேறு நாடுகள் மேற்கொள்ள உள்ள முதலீடுகள் குறித்த பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 330 பில்லியன் டாலருக்கும் முதலீடு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட இந்தப் பட்டியலில், இந்தியாவின் முதலீடு இரண்டு பிரிவுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பிரிவில் 310 பில்லியன் டாலரும், மற்றொரு பிரிவில் 20.5 பில்லியன் டாலரும் இடம்பெற்றுள்ளன.

 இதில், இந்தியாவைச் சேர்ந்த எஸ்ஸார் குழுமத்தின் மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் எஃகு ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது.

ஆனால், கடந்த மார்ச் மாதம், டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில்லில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதே போன்று, மே மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற செலக்ட் யுஎஸ்ஏ முதலீட்டு உச்சி மாநாட்டையொட்டி, இந்தியத் தொழில்துறையினர் அமெரிக்காவில் 20.5 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்திருந்தனர்.

இந்தியாவின் புதிய முதலீடு திட்டங்கள் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை முழு விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்தமாக, அமெரிக்க உள்நாட்டுத் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் முதலீடுகள் உள்ளிட்டவை சேர்த்து, 10.871 டிரில்லியன் டாலர் முதலீடு வர இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தவறான கூற்றுகளை பாக்கெட்டில் வெளியிட்ட நெஸ்லே, யூனிலீவர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
அடுத்த செய்தி
இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா? லிஸ்ட் இதோ!

தொடர்புடைய செய்திகள்